தஞ்சாவூர் : தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். இவ்வாண்டு பணி ஓய்வு பெறும் பேராசிரியர்கள் பொன்னியின் செல்வி, செம்பக லெட்சுமி ஆகியோர் சிறப்புரை வழங்கினர். பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அனைத்து அடிப்படை பணியாளர்களுக்கும் புத்தாடைகள் வழங்கி அவர்களின் பணியைப் பாராட்டி கெளரவம் செய்யப்பட்டது. ஜோதி அறக்கட்டளை சார்பாக கலைநிகழ்ச்சி நடத்திய மாணவ மாணவிகளுக்கும் அணி வகுப்பு மேற்கொண்ட மாணவிகளுக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டன.
விழாவில் தேர்வு நெறியாளர் மலர்விழி, நிதியாளர் ராஜாராமன் துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர். நண்பகல் நடைப பெற்ற மரக்கன்று நடுவிழாவில் கல்லூரி சமூகக்காடுகள் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
தஞ்சாவூர் தீயணைப்பு துறை அலுவலகத்தில் தேசியக் கொடியை தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் குமார் ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் போக்குவரத்து கணேசன், உதவி மாவட்ட அலுவலர் முருகேசன் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் கலந்து கொண்டனர்.