இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும் காவ்யா மாறனும் கிரீஸ் நாட்டில் திருமணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து சென்னைக்குத் திரும்பியுள்ளனர்.
நவம்பர் 11-ஆம் தேதி நடைபெற்ற இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகின. திருமணத்திற்குப் பிறகு முதல்முறையாக இருவரும் சென்னைக்கு வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு வந்த புதுமணத் தம்பதியினருடன் காவ்யா மாறனின் தந்தையும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனும் வந்திருந்தார். விமான நிலையத்தில் அவர்களைப் பார்க்க ரசிகர்கள் திரண்டிருந்தனர். அனிருத் ரசிகர்களை நோக்கிக் கையசைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
இருவரும் எளிமையான உடையில் விமான நிலையத்திலிருந்து வெளியேறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின.
இவர்களது திருமணம் சுயமரியாதைத் திருமண முறையில் நடைபெற்றதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. வழக்கமான மதச் சடங்குகளுக்குப் பதிலாக மணமக்களின் விருப்பம் மற்றும் சமத்துவத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் திருமணம் நடைபெற்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால் இவர்களது திருமணம் திரையுலகத்தையும் தாண்டி சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியது. திருமணத்தைத் தொடர்ந்து அனிருத் தனது இசைப் பணிகளில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் பணிகளைத் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் நவம்பர் 21-ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இசை உலகில் தொடர்ந்து பல வெற்றிப் பாடல்களை வழங்கி வரும் அனிருத்தின் திருமணச் செய்தி ரசிகர்களிடையே இன்னும் பேசுபொருளாக உள்ளது.
