நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள மணிகண்டா திரைப்படத்தின் டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கார்த்திகை மாதம் மற்றும் ஐயப்ப பக்தி காலத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் டீசர் நவம்பர் 17-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக தத்துவமசி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் படம் பின்னர் மணிகண்டா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஐயப்ப பக்தர்களின் ஆன்மிகப் பயணம், நம்பிக்கை, பக்தி ஆகியவற்றுடன் அதிரடி அம்சங்களையும் இணைத்து இப்படம் உருவாகி வருகிறது.
மலையாளத்தில் பக்தி உணர்வை மையமாகக் கொண்டு வெற்றி பெற்ற மாளிகப்புரம் படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இப்படத்தை இயக்குகிறார். வெங்கட் பிரபு படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார். இதனால் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
வைபவ் இந்தப் படத்திற்காக தனது தோற்றத்திலும் உடல் அமைப்பிலும் மாற்றங்களைச் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். ஆடுகளம் நரேன், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
