விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் அவரது தங்கையாக புவனா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நான்சி ஜெனிபர் திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளார். கார்த்திக் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது திருமணப் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.
கில்லி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான நான்சி ஜெனிபர், அந்தப் படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்ததன் மூலம் பிரபலமானார். திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்தாலும் புவனா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நினைவில் இருக்கும் கதாபாத்திரமாகத் திகழ்கிறது.
சென்னையில் கடற்கரையை ஒட்டிய இடத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமண நிகழ்ச்சியின் அழகான தருணங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ள நான்சி ஜெனிபருக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கில்லி படத்தில் பார்த்த சிறுமி தற்போது திருமணக் கோலத்தில் இருப்பதைப் பார்த்து ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
