தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய அமெச்சூர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் பிளிட்ஸ் பிரிவில் இந்திய வீரர் ஆர். ஷாம் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
ஒன்பது சுற்றுகளைக் கொண்ட போட்டியில் கஜகஸ்தான் வீரர் இப்ராஹிம் பெக்போல் முதலிடத்தைப் பிடித்தார். ரஷ்ய வீராங்கனை எகடெரினா போரிசோவா பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்திய வீரர் ஆர். ஷாம் 7½ புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். பிலிப்பைன்ஸ் வீரர் ரோலி பராண்டோவும் அதே புள்ளிகளைப் பெற்றிருந்தார்.
நேரடி மோதல் அடிப்படையில் பிலிப்பைன்ஸ் வீரருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. இந்திய வீரர் மூன்றாவது இடத்தைப் பிடித்து பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
இந்தப் போட்டி நவம்பர் 21 முதல் 29 வரை நடைபெறுகிறது. ஆசிய நாடுகளின் செஸ் வீரர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
