திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள் மற்றும் போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவு நவம்பர் 23 இரவு முதல் நவம்பர் 25 காலை வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபம் ஏற்றுவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு அமைப்புகள் திரள வாய்ப்புள்ளதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
