சென்னை: மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க., தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:
மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கான திட்டங்களை அறிவிக்காதது கண்டிக்கத்தக்கது. நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து தீர்மானம். தமிழகத்தில் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி தீர்மானம். மாதாந்திர மின் கணக்கீட்டு முறையை அமல்படுத்த கோரிக்கை.
மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தின் மீதான 18 சதவீத ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானம். மீனவர்கள் நலனில் அக்கறை காட்டாத மத்திய, மாநில அரசை கண்டித்து தீர்மானம். வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தி தீர்மானம். லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம். ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்காத திமுக அரசை கண்டித்து தீர்மானம்.
தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்து தீர்மானம். அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முடக்கி, முடக்கி வரும், தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் திமுக அரசை கண்டித்து தீர்மானம். இபிஎஸ் வகுத்துள்ள தேர்தல் வியூகத்தின்படி உள்ளாட்சி மற்றும் 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க தீர்மானம்.