சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆறுகால பூஜையை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை ஏறுவதை தடுக்க கூடாது என பொது தீட்சிதர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மற்றும் வழக்கு மூடப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி, கனகசபையில் பக்தர்கள் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்பந்தமூர்த்தி ராமநாதன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி ஆகியோர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது தீட்சிதர்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்ய தடை இல்லை என்றும், ஆறு கால பூஜை நேரங்களில் மட்டும் கனகசபைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கனகசபையில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்த அரசு உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும், ஆனால், விழாக்காலங்களில் பக்தர்கள் கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. தீட்சிதர்களின் எதிர் மனுவை பதிவு செய்த நீதிபதிகள், ஆறு கால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் கனகசபைக்கு பக்தர்கள் வருவதை தடுக்கக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.