திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து, எத்தனால் மற்றும் இணை மின் உற்பத்தி நிலையம் துவங்க ரூ.190 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.