பாங்காங்: பாங்காக் சதுப்பு நிலப் பகுதியில் சிறு பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 9 பேர் பலியாகி உள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே சதுப்பு நிலப் பகுதியில் சிறு பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த 9 பேரும் உயிரிழந்தனர். பாங்காக்கின் ஸ்வர்ணபூமி விமான நிலையத்தில் இருந்து டிராட் மாகாணத்துக்கு அந்த விமானம் சென்றுகொண்டிருந்தது.
தாய் விமான சேவை என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில் சீனாவைச் சேர்ந்த 5 சுற்றுலாப் பயணிகள், 2 பைலட்டுகள் உள்பட தாய்லாந்தைச் சேர்ந்த 4 பேர் இருந்தனர். புறப்பட்ட 11 நிமிடங்களில் விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து நேர்ந்த இடத்தில் தாய்லாந்து காவல் துறையின், தடயவியல் நிபுணர்களும், மீட்புக் குழுவினரும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.