சென்னை: என்னிடம் போலீசார் விசாரணை நடத்தவில்லை. எங்களை எதற்கு இதில் சம்பந்தப்படுத்துகிறீர்கள் என்று காட்டமாக கேட்டுள்ளார் இயக்குனர் நெல்சன்.
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கில் இயக்குனர் நெல்சனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாக தொடர்ந்து ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இதற்கு தற்போது இயக்குனர் நெல்சன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
பகுஜான் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையினர் 28 பேரை கைது செய்ததுடன் 200 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மொட்டை கிருஷ்ணன் என்பவரிடம் இயக்குனர் நெல்சனின் மனைவி செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்ற தகவல் வெளிவந்த நிலையில் காவல்துறையினர் அவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் இயக்குனர் நெல்சனிடம் தனியார் தொலைக்காட்சி ஒன்று செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இதைப்பற்றி அவரிடம் கேட்டபோது அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதில் அவர் ” காவல்துறையினர் என்னிடம் எந்த ஒரு விசாரணையும் நடத்தவில்லை சில ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டு வருகின்றன. என்னிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தால் நான் எப்படி மறுக்க முடியும்.
என்னுடைய மனைவியிடமும் காவல்துறையினர் 30 நிமிடத்திற்கு குறைவாக அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த விஷயத்தில் எதற்காக எங்களை சம்பந்தப்படுத்துகிறீர்கள். எங்களிடம் காவல்துறையினர் எந்த விசாரணையும் நடத்தவில்லை” எனவும் கூறியுள்ளார்.