ஏராளமான அத்தியாவசிய வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிரம்பியுள்ள முருங்கை பவுடர் நியூட்ரிஷனல் பவர்ஹவுஸாக குறிப்பிடப்படுகிறது. நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் உடல் எடையை பராமரிக்க முக்கியமான வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், இரும்பு மற்றும் புரதத்தை அதிகமாக கொண்டுள்ளது. இதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம்முடைய உடல் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கவும், உடல் எடையை பயனுள்ள முறையில் குறைக்கவும் உதவுகின்றன. நம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் நேர்மறை தாக்கத்தை முருங்கை பவுடர் ஏற்படுத்துகிறது.
உணவை ஆற்றலாக மாற்றுவதற்கு உதவும் வைட்டமின் பி, முருங்கை பவுடரில் ஏராளமாக உள்ளது. இது நம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும். மேலும் இது நம் உடல் அதிக கலோரியை எரிக்கவும் மற்றும் எடையை இழக்கவும் உதவும். எடையை இழக்க முருங்கை பவுடர் உதவும் தனித்துவ விஷயங்களில் ஒன்று அதன் பசியை அடக்கும் திறன். முருங்கையில் காணப்படும் மிகுதியான ஃபைபர் சத்து, நன்கு சாப்பிட்ட திருப்தி மற்றும் முழுமை உணர்வை ஏற்படுத்த உதவுகிறது.
இரு வேளை உணவுகளுக்கு உணவுக்கு இடையில் தேவையற்ற ஸ்னாக்ஸ்களை சாப்பிடுவதற்கான வாய்ப்பை இதன் மூலம் குறைக்கிறது. அடிக்கடி பசி மற்றும் உணர்ச்சிவசப்பட்டால் சாப்பிடும் பழக்கம் உள்ளிட்டவற்றுடன் போராடும் நபர்களுக்கு முருங்கை பொடியின் இந்த தன்மை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முருங்கை பொடியில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் பைட்டோ கெமிக்கல்ஸ் நிறைந்துள்ளன. இதன் காரணமாக இது நச்சுக்களை வெளியேற்றும் பண்புகளை கொண்டுள்ளது.
முருங்கை பவுடரில் உள்ள இந்த கலவைகள் உடலில் இருக்கும் நச்சுகள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற உதவி சிறந்த செரிமானத்தை உறுதி செய்கிறது. செரிமான ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது நாம் எடுத்து கொள்ளும் உணவுகளில் இருந்து நம் உடல் போதுமான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும், உடல் எடை மேலாண்மையை சிறப்பாக கொண்டு செல்லவும் வழிவகுக்கும். நாள்பட்ட அழற்சியானது உடல் எடை அதிகரிப்பு முதல் பல உடல்நல பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்க கூடும்.
முருங்கை பவுடர் ஒரு சக்திவாய்ந்த ஆன்டி-இன்ஃப்ளமேட்ரி ஏஜென்ட் ஆகும். முருங்கை பவுடரில் குவெர்செடின் மற்றும் கேம்ப்ஃபெரால் போன்ற கலவைகள் உள்ளன, இவை உடலில் உள்ள அழற்சி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும். இதன் மூலம் எடை இழப்பு முயற்சிக்கு பக்கபலமாகவும் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை சிறப்பாக வைக்கவும் முருங்கை பவுடர் உதவும். உங்களுக்கு ஏதேனும் அடிப்படை மருத்துவ நிலைமைகள் இருந்தால் அல்லது மருந்துகளை எடுத்து கொண்டு வந்தால் மருத்துவருடன் கலந்தாலோசித்த பின் முருங்கை பவுடர் பயன்படுத்துவது புத்திசாலித்தனமானது.