சென்னை: சவுதி அரேபிய அரசு மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவ ஆலோசகர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் அவசியம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான சி.என்.மகேஸ்வரன் இன்று (ஆகஸ்ட் 29) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வளைகுடா நாட்டில் இயங்கும் மருத்துவமனையில் பணிபுரிய மருத்துவ ஆலோசகர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் தேவை. சவுதி அரேபியா அமைச்சகம். மருத்துவத் தகுதியுடன் குறைந்தபட்சம் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயது 55-க்குள் இருக்க வேண்டும். இதற்கான நேர்காணல் ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது. பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம், உணவு, தங்குமிடம் மற்றும் விமான டிக்கெட் வழங்கப்படும்.
சம்பளம் மற்றும் வேலை விவரம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, 9566239685 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இடைத்தரகர்கள் அல்லது முகவர்கள் இல்லை.
எனவே, விண்ணப்பதாரர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.omcmanpower.tn.gov.in) நேரடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றார் அவர்.