அமராவதி: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் எம்.வெங்கட ரமணா, பி.மஸ்தான் ராவ் மற்றும் இருவரும் நேற்று காலை டெல்லியில் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கரிடம் ராஜினாமா கடிதம் அளித்தனர்.
அது உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவர்கள் இருவரும் ராஜினாமா செய்ததை தொடர்ந்து ஜெகன் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது.
இதில் வெங்கட ரமணா பதவிக்காலம் 2026 வரையிலும், மஸ்தான் ராவ் பதவிக்காலம் 2028 வரையிலும் உள்ளது. இந்நிலையில் இருவரும் விரைவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கு தேசம் கட்சியில் அவர்களுக்கும் அதே பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.