* மருதாணி மீது சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு தடவினால் அது சீக்கிரம் காய்ந்து போகாமல் நீண்ட நேரம் ஒட்டிக் கொண்டிருப்பதால் நல்ல சிவப்பு நிறம் கிடைக்கும்.
* நான்கு கிராம்புகளை தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தி மருதாணி விழுதைக் கலந்து சாப்பிட நல்ல சிவப்பு நிறம் கிடைக்கும்.
* கை, கால்களில் மருதாணியை தண்ணீரில் கழுவ வேண்டாம். உங்கள் கையில் மருதாணி நல்ல சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டுமெனில் கடுகு எண்ணெயை கைகளில் தடவி மருதாணியை நீக்கலாம். கடுகு எண்ணெய் கிடைக்காவிட்டால் யூகலிப்டஸ் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
* கைகளில் மருதாணி போட்ட பிறகு தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறைந்தது ஐந்து மணி நேரமாவது தண்ணீரைத் தொடாதீர்கள்.
*மருதாணியை நீக்கிய பின் கையில் சிறிது நேரம் எண்ணெய் தடவ வேண்டும். இதுபோன்ற நடைமுறைகளைச் செய்தால், கண்டிப்பாக உங்கள் கைகளில் மருதாணி செக்க சிவப்பு நிறத்தைப் பெறும். மருதாணி பூசுவது அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் நல்லது.
* இரத்தப்போக்கு நின்று மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்யும்.
* பித்த வெடிப்பிலிருந்து பாதங்களைப் பாதுகாக்கிறது.
* உடல் உஷ்ணத்தைக் குறைத்து உடல் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களைத் தடுக்கிறது.