மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரித்த ஹேமா கமிட்டி அறிக்கை புயலை கிளப்பியுள்ளது.
சில நடிகைகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து தெலுங்கானா அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என நடிகை சமந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஹேமா கமிட்டி அறிக்கையை தெலுங்கு சினிமா நடிகைகள் வரவேற்கிறோம். மலையாளத் திரையுலகின் ‘விமன் இன் சினிமா கலெக்டிவ் (WCC)’ என்ற பெண்கள் அமைப்பினரையும் நாங்கள் பாராட்டுகிறோம்.
தெலுங்கு திரையுலகில், கடந்த 2019-ம் ஆண்டு ‘தி வாய்ஸ் ஆஃப் வுமன்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை தொடர்பான குழுவின் அறிக்கையை தெலுங்கானா அரசு வெளியிட வேண்டும்.
அதை வெளியிட்டால் தான் தெலுங்கு பட உலகில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க முடியும் என சமந்தா குறிப்பிட்டுள்ளார். சமந்தாவின் இந்த வேண்டுகோள் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.