பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி திருப்பதி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். மகாராஷ்டிராவில் பிறந்த ஹன்சிகா 1991ல் பிறந்து தற்போது 33 வயதாகிறது.
தனது பத்தாவது வயதில் நடிப்புத் துறையில் தனது பயணத்தைத் தொடங்கிய இவர், 2001ஆம் ஆண்டு “சச்சலக்கா பூம் பூம்” நாடகத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். பல மொழி படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
தற்போது தமிழில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். 2022 ஆம் ஆண்டு ஜோஹைல் கதுரியாவை திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா, சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இந்த ஆன்மிக பயணத்தின் போது அவர் தனியாக செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.