கொடைக்கானல்: வார விடுமுறையை கொண்டாட நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மிதமான மழைக்கு நடுவே இயற்கையின் அழகை ரசித்தனர்.
“மலைகளின் இளவரசி” கொடைக்கானலில் வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
இதன் காரணமாக நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, மோயர் பாயின்ட், பைன் வனம், பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை, தூண் பாறை போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்களில் கூட்டம் அலைமோதியது.
சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடைக்கானலில் நேற்று மாலை பெய்த மழையால் இதமான சூழல் நிலவியது. சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்து இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.
தூண் பாறை மற்றும் குணா குகைகள் அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டது. கொடைக்கானல் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.