சென்னை: பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறு போக்குவரத்து துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் இணையதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சராசரியாக, 2,500-க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு, பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்கின்றனர்.
நீண்ட தூரம் மற்றும் புறநகர்ப் பயணிகள் கடைசி நிமிட அவசரத்தைத் தவிர்க்க www.tnstc.in அல்லது tnstc பயன்பாட்டைப் பயன்படுத்துகின்றனர். பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் இருக்கை மற்றும் தூங்கும் வசதியுடன் கூடிய 150 புதிய சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆன்லைன் முன்பதிவு முறையை அதிக மக்கள் பயன்படுத்தும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.
தங்கள் கருத்துக்களை ptcsoffice2023@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.