மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ஆந்திராவுக்கு ரூ. 3,448 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார். இது மத்திய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் முயற்சியில் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
கிருஷ்ணா மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை சவுகான் பார்வையிட்டார். விவசாயிகளின் நஷ்டத்தை அறிந்த சவுகான் அவர்களிடம் நேரடியாக பேசினார். வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள் குறித்து விவசாயிகள் வேதனையை பகிர்ந்து கொண்டனர். சவுகான் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
நிவாரண நிதியுடன், விவசாயிகளுக்கு உதவவும், பயிர் காப்பீட்டு பலனை உறுதி செய்யவும், குத்தகை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.