சென்னை: அருமையான சுவையில் சேனைக்கிழங்கு பொரியல் செய்வோம் வாங்க. இதை வேண்டாம் என்று சொல்பவர்கள் கூட ரசித்து சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
சேனைக்கிழங்கு – 1/4 கிலோ
பெரிய வெங்காயம் – 1
வரமிளகாய் – 4
தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1/4 தேக்கரண்டி
உடைத்த உளுந்து – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
பெருங்காயம் – 2 சிட்டிகை
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை: சேனைக்கிழங்கை முதலில் பெரிய துண்டுகளாக வெட்டி, கிழங்கு குழைந்து விடாமல் முக்கால் வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் இதனைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உடைத்த உளுந்து போட்டு தாளிக்கவும்.
அதனுடன் கறிவேப்பிலை, வரமிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அதில் பெருங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி விட்டு, வேகவைத்து நறுக்கிய சேனைக்கிழங்கைப் போட்டு நன்கு வதக்கவும்.
அடுத்து தேங்காய் துருவல் சேர்த்து லேசாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.