சென்னை: வீட்டில் சூப்பரான கரண்டி ஆம்லெட் செய்வோமா. வாங்க அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்: முட்டை – 1 சின்ன வெங்காயம் – கைப்பிடி ப.மிளகாய் – 1 கொத்தமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத்தூள் – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: சின்னவெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும். ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அடுத்து அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், கறிவேப்பிலை, மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
ஒரு குழிக்கரண்டியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் முட்டை கலவையை ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறம் வெந்ததும் எடுக்கவும். இப்போது சூப்பரான கரண்டி ஆம்லெட் ரெடி. ருசியும் பிரமாதமாக இருக்கும்.