காஞ்சிபுரம்: அண்ணா பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா வந்தார்.
அண்ணாவின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணாவின் வீட்டையும் அவள் புகைப்படங்களையும் சுற்றிப் பார்த்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற 4 ஆண்டுகளில் 4 முறை வெளிநாட்டு பயணம் செய்துள்ளார். துபாய், சிங்கப்பூர், மலேசியா, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார்.
2024-ம் ஆண்டு தமிழகத்தில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி ரூ.6,63,180 கோடிக்கு வர்த்தகம் வரும் என்றார்கள். இத்தொழில்கள் மூலம் 14 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும், மறைமுகமாக 12 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றனர்.
அதேபோல் வெளிநாடு செல்லும் போதெல்லாம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதாக மட்டும் கூறி வருகின்றனர். எத்தனை நிறுவனங்கள் வந்தன; எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்பதை கூற வேண்டும் என்றார்.
முன்னாள் எம்எல்ஏ மொளச்சூர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.