தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் – 10
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
பெருங்காய தூள் – ஒரு சிட்டிகை
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் முழு நெல்லிக்காய், மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து, நெல்லிக்காயை தண்ணீரில் இருந்து எடுக்கவும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் அழுத்தினால் நெல்லிக்காய் சிறு துண்டுகளாக விழும். இல்லை என்றால் கத்தியால் நீள துண்டுகளாக வெட்டி நடுவில் உள்ள கொட்டையை நீக்கவும். நெல்லிக்காய் துண்டுகள் மீது உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் தூவி நன்றாக பிசறி விடவும். ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின் வெந்தயப் பொடியைத் தூவி நன்கு கிளறவும். சூப்பர் இன்ஸ்டன்ட் நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி. இது 2 அல்லது 3 நாட்களுக்கு அப்படியே இருக்கும்.