சென்னை: தினசரி ஆப்பிள் சாப்பிடுபவர்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லைஎன்பது பழமொழி. ஆப்பிளாக சாப்பிட விரும்பாதவர்கள் அதை டீயாக குடித்து வரலாம். ஆப்பிளில் கலோரிகள் மிகவும் குறைவாக இருப்பதால் உடல் எடையைக் குறைப்பதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.
தேவையானபொருட்கள்
ஆப்பிள் -1
டீத்தூள் – 1டீஸ்பூன்
இஞ்சி – சிறுதுண்டு
எலுமிச்சை -1
மிளகு – 1டீ ஸ்பூன்
தேன் -சுவைக்கேற்ப
செய்முறை: பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மிளகு, எலுமிச்சை சாறு, இஞ்சி போன்றவற்றை சேர்க்கவும். தண்ணீர் பாதியாகக் குறையும் வரை கொதிக்க விடவும்.
இதனை வடிகட்டி தோல்சீவிய ஆப்பிளை துருவிப் போடவும். சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலக்கவும். இதில் டீத்தூள் அல்லது டீபேக் போட்டு 10 நிமிடங்கள் மூடி விடவும்.
வடிகட்டி கோல்ட் டீயாக குடிக்கலாம். சுவையும், மணமும் அபாரமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அற்புதமான டீ. தினமும் குடித்துவர உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.