தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்ட அறிக்கை:-
தமிழ் சினிமாவின் விதிமுறைகளை சீர்திருத்த, மேம்படுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. நவம்பர் 1-ம் தேதி முதல் புதிய விதிமுறைகளுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இல்லை என்றால் சுமுக முடிவு எடுக்கும் வரை அனைத்துப் பணிகளையும் நிறுத்தி வைப்பது என்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, தொழிலாளர் கூட்டமைப்புக்கு அனுப்பிய அனைத்து மறுசீரமைப்பு விதிமுறைகள் குறித்தும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு பதில் அனுப்பியுள்ளோம். பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கி விரைவில் முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
புதிய படங்கள் நிறுத்தப்பட்டதால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அக்.1 முதல் புதிய விதிமுறைகளுடன் படப்பிடிப்பை தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சினிமாவில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெப்சி சார்பில் இயக்குனர்கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம், மற்றும் ஏழு சங்கங்கள் இணைந்து கமிட்டி அமைக்க உள்ளோம்.
பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.