புதுடில்லி: 2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
2026-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நாட்டில் இருந்து நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
நக்ஸல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களை டெல்லியில் நேரில் சந்தித்துப் பேசிய அவர், மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடையும்படி வலியுறுத்தினார். அப்படி, சரணடையவில்லை என்றால், அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, முற்றிலும் அழிக்கப்படுவார்கள் என்று அமித் ஷா எச்சரித்தார்.
மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் சத்தீஸ்கரில் நான்கு மாவட்டங்களில் மட்டுமே தற்போது நக்ஸல்கள் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.