சென்னை: அனைவரும் விரும்பிச் சாப்பிடும் கத்தரிக்காய்- மாங்காய் குழம்பினை எவ்வாறு தயார் செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் – அரை கிலோ
தக்காளி – 2
வெங்காயம் – 2
மாங்காய் – 1
புளி – எலுமிச்சை அளவு
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை: தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய் மற்றும் மாங்காயை நறுக்கிக் கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி புளியைப் போட்டுக் கரைத்து அத்துடன் உப் பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்அறி கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் போட்டு வதக்கவும். வதக்கிய கலவையுடன் புளிக் கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும். கொதிக்கும்போது மாங்காய் துண்டுகளைப் போட்டு வேகவிட்டு இறக்கினால் கத்தரிக்காய்- மாங்காய் குழம்பு ரெடி.