நியூயார்க்: இந்தியர்கள்தான் அதிகம்… ஐ.நா., உலக அளவில் வாழும் இந்தியர்கள் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. புலம் பெயர்ந்தவர்களில் அதிகம் இந்தியர்களே என்ற நிலையை எட்டியுள்ளனர்.
உலக அளவில் 2020 வரை புலம்பெயர்ந்தோர் கணக்கீடு தொடர்பாக எடுக்கப்பட்ட விவர அறிக்கை ஒன்றை ஐ.நா., அமைப்பு வெளியிட்டுள்ளது. இடம்பெயர்வு தொடர்பான ஐ.நா.வின் சமீபத்திய ஆய்வின்படி, கூறப்பட்டுள்ளதாவது: 2000ல் எடுக்கப்பட்ட ஆய்வின் கணக்கெடுப்பின் படி இந்தியா ஒன்னே முக்கால் மடங்கு புலம்பெயர்வில் முன்னேறி உள்ளது.
உலகளவில் அதிகமான மக்கள் வெளிநாட்டில் வசிப்பவர்களில் எந்த நாட்டவரும் இல்லாத அளவுக்கு இந்தியா முதலிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தியாவில் பிறந்த 17.9 மில்லியன் (ஒண்ணே முக்கால் கோடி) பேர் வெளிநாட்டில் வசிப்பவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவிற்கு அடுத்தப்படியாக மெக்ஸிகோ மற்றும் ரஷ்யா நாடுகள் 2வது, 3வது இடத்தில் உள்ளன. அந்நாடுகளில் பிறந்து வெளிநாடுகளில் வசிப்பவர்கள் முறையே 11.2 மில்லியன் (1.12 கோடி) மற்றும் 10.8 மில்லியன் (1.08 கோடி) பேர் உள்ளனர். கடந்த 2000ல் 7.9 மில்லியன் (79 லட்சம்) பேர்களுடன் இந்தியா 3வது இடத்தில் இருந்தது. தற்போது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
2000 முதல் 2020 க்குள் மெக்ஸிகோ மற்றும் ரஷ்யாவை இந்தியா முந்தியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது நம்பமுடியாத அளவிற்கு 10 மில்லியன் (ஒரு கோடி பேர்) இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தோர் பட்டியலில் உயர்ந்துள்ளனர்.
கடந்த 2000ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி உலக அளவில் 173 மில்லியன் (17. 3 கோடி) மக்கள் தங்களின் சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். 2020 கணக்கெடுப்பின்படி 281 மில்லியன் (28.1 கோடி பேர்) உலக மக்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.