சென்னை: சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நிதியை விடுவிக்க வலியுறுத்தினார்.
மத்திய அரசு நிதி வழங்காததால், சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தில் பணிபுரியும் 20,000 ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு மத்திய அரசு இன்னும் ரூ.2,151 கோடியை வழங்கவில்லை.
மத்திய அரசு நிதி வழங்காத நிலையில், கடந்த 4 மாதங்களாக மாநில அரசு நிதியில் இருந்து ஊதியம் வழங்கப்பட்டது. இந்நிலையில், பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தியும் மத்திய அரசு நிதியை விடுவிக்காததற்கு ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் நிதியில் இருந்து சம்பளம் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.