புதுடெல்லி: ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்தபோது, திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று (அக்.4) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தப் பிரச்னை தொடர்பாக ஆந்திர அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவை மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதிய சிறப்பு புலனாய்வுக் குழுவில் 2 சிபிஐ அதிகாரிகள், 2 ஆந்திரப் பிரதேச காவல்துறை அதிகாரிகள் மற்றும் 1 இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் பிரதிநிதி ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று அறிவித்த உச்ச நீதிமன்றம், விசாரணைக் குழுவை சிபிஐ இயக்குனரே கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மனுதாரர்கள் வலியுறுத்தினர். அப்போது நீதிபதிகள், நீதிமன்றத்தை ‘அரசியலுக்கான களமாக’ பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும், இது அரசியல் நாடகமாக மாறுவதை நாங்கள் விரும்பவில்லை” என்றார்.
இன்றைய விசாரணையில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “லட்டு தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது உண்மைதான், ஆனால் அதை ஏற்க முடியாது.
திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளனர். இதில் உணவு பாதுகாப்பும் அடங்கும். சிறப்பு புலனாய்வுக் குழுவின் பணியிடமாற்றத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று அவர் கூறினார்.