சென்னை: போலி ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி கால் டாக்சி ஓட்டுநரிடம் பணம் பறிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வடபழனி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் கோவிந்த ராஜ். நேற்று அவருக்கு ரைடு கால் வந்தது. வடபழனியில் இருந்து மகாபலிபுரத்திற்கு முன்பதிவு செய்த ஆண் பயணி ஒருவர், வாகனம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தேநீர் அருந்தலாம் என்று கூறி வாகனத்தை நிறுத்தச் சொன்னார்.
அப்போது, அவர் கையில் கரன்சி நோட்டுகள் இருந்தன. அதை வைத்துக்கொண்டு GPay மூலம் பணம் அனுப்புங்கள் என்று டிரைவர் கோவிந்தராஜிடம் அந்த நபர் கூறினார்.
டிரைவர் கோவிந்த ராஜும், ஜிபே மூலம் அவருக்கு ரூ.7,000 அனுப்பினார். பணம் அனுப்பிய சில நொடிகளில் டீக்கடையில் நின்றவர் மறைந்தார். அப்போது கால் டாக்சி ஓட்டுநர் கோவிந்த ராஜ், டாக்சியில் இருந்த பயணி ரூ.7,000 மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஏமாற்றியதை உணர்ந்தார்.
இதுகுறித்து, அவர் வடபழனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.