மதுரை: தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் இருந்து பிரதமர் அலுவலக செயலாளரை விடுவிக்க மறுப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மீனவர் தாக்கப்பட்ட வழக்கில் இருந்து பிரதமர் அலுவலக செயலாளரை நீக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.
இந்த வழக்கில் இருந்து பிரதமர் அலுவலக முதன்மை செயலாளரை ஏன் நீக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பிரதமர் அலுவலக செயலாளர், மத்திய உள்துறை செயலாளர், வெளியுறவுத்துறை செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.