திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாசி மாதத்தில் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். 5-வது சனியை முன்னிட்டு நேற்று கோவிலில் கூட்டம் அலைமோதியது. அதன்படி நேற்று 80,741 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
31,581 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியல்களாக ரூ.3.45 கோடி செலுத்தினர். விடுமுறை நாளான இன்று காலை முதல் வைகுண்டம் கியூ வளாகத்தில் 5 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.