தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் வாய்க்கால் தூர் வராததால் வயலில் தேங்கிய மழைநீரால் மூழ்கி பயிர்கள் அழுகும் நிலை உருவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழையால் கும்பகோணம் அருகே செருகுடி பகுதியில் மண் வாய்க்கால் தூர் வராததால் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது .
ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து நான்கு நாட்களுக்கு முன் நடவு செய்த சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் இருப்பதால், வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.