சென்னை: அல்சர் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள் குளிர்ந்த பால் குடிப்பது நல்லது. இதனால் நெஞ்செரிச்சலைத் தணிக்கும்.
அல்சர் வருவதற்கு முக்கிய காரணம் கார உணவு, நேரந்தவறிய உணவு, அதீத உணவு, மசாலா நிறைந்த உணவு, அசைவ உணவு. இதைத் தவிர அடிக்கடி சாப்பிடும் வலி நிவாரண மாத்திரைகளும் அல்சரை உருவாக்கலாம்.
உண்மையில் அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் நம்மிடையே சர்வ சாதாரணமாக பேசப்படும் ஒன்று. உணவுப்பாதை, வயிறு, சிறு குடல் இவற்றில் புண் ஏற்படுவதினை வயிற்றுப் புண் என்கின்றோம். இதற்கு வலி நிவாரணி மாத்திரைகளை உட்கெள்ளாமல் இயற்கை வைத்தியங்கள் சிலவற்றை பார்ப்போம்.
அல்சர் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள் குளிர்ந்த பால் குடிப்பது நல்லது. இதனால் நெஞ்செரிச்சலைத் தணிக்கும்.
நீரில் ஊற வைத்து, தோலுரிக்கப்பட்ட பாதாம் பருப்பு சாப்பிடுவது அல்லது பாதாம் பால் குடிப்பது அல்சருக்கு நல்லது. அல்சர் பிரச்சனை உள்ளவர்கள், நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடித்து வருவது நல்லது. தினமும் 2-3 வாழைப்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அல்சர் பிரச்சனையால் அவஸ்தைப்படுவதில் இருந்து விடுபடலாம்.
தினமும் 1-2 வில்வ இலைகளை வாயில் போட்டு மென்று வந்தால், வயிற்றுப் புண் சரியாகும். முட்டைக்கோஸை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை கேரட் ஜூஸ் உடன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அல்சர் இருப்பவர்கள், தினமும் சாதத்தில் தேங்காய் பால் சேர்த்து உட்கொண்டு வர, விரைவில் வயிற்றில் உள்ள புண் குணமாகும்.
காலையில் பிரட் மற்றும் வெண்ணெய் உட்கொண்டு வர, அல்சர் மூலம் ஏற்படும் வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். அல்சர் இருப்பவர்கள், வெள்ளை பூசணியை ஜூஸ் போட்டு குடித்து வருவது நல்லது. தினமும் காலையில் வீட்டில் தயாரித்த ஆப்பிள் ஜூஸ் குடித்து வருவதன் மூலம், அல்சரால் ஏற்படும் கடுமையான வலியைக் குறைக்கலாம்.
நன்கு புளித்த மோரை அல்சர் இருப்பவர்கள் குடித்து வந்தால், மோரில் உள்ள பாக்டீரியா, வயிற்றுப்புண்ணை குணமாக்கும். கொளுந்து வேப்பிலையை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது உட்கொண்டு வர, அல்சர் மட்டுமின்றி, வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். அல்சர் உள்ளவர்கள், தினமும் முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தால், விரைவில் அல்சரை குணமாக்கலாம்.