மஞ்சூர்: சாலையோரங்களில் பூத்துக் குலுங்கும் ரெட்லீப் பூக்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நிறம் மாறும் செம்பருத்தி மலர்கள் அதிகளவில் பூத்துக் குலுங்குகின்றன.
இதேபோல் மஞ்சூர், ஊட்டி, குன்னுார் சாலைகள், சாம்ராஜ், பெங்கால்மட்டம், தாய்சோலை, மேல் பவானி சாலை மற்றும் மஞ்சூரில் இருந்து அறையட்டி, கொல்கம்பை, பழனியப்பா எஸ்டேட் செல்லும் சாலைகளின் இருபுறமும் செம்பருத்தி பூக்கள் பூத்து குலுங்குகின்றன. செடிகளின் இலைகள் கண்ணைக் கவரும் மெரூன் மற்றும் சிவப்பு நிறங்களில் பூக்கள் போல் இருக்கும்.
இலைகள் ஆரம்பத்தில் பச்சை நிறமாகவும், பின்னர் பழுப்பு, மஞ்சள் மற்றும் மெரூன் நிறமாகவும், இறுதியாக அடர் சிவப்பு நிறமாகவும் இருப்பதால், இந்த மலர்கள் நிறம் மாறும் மலர்கள் என்று அழைக்கப்படுகின்றன.
மஞ்சூர் பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான அவலாஞ்சி, கிண்ணக்கொரை, பென்ஸ்டாக் காட்சிமுனை மற்றும் பிற இடங்களுக்கு வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
இதனால், இங்கு வரும் பயணிகள், இந்த ரெட்லீப் பூக்களை கண்டு உற்சாகமடைந்து, இந்த செடிகளுக்கு அருகில் புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.