சீனா: 3 விண்வெளி வீரர்களுடன் விண்ணில் வெற்றிகரமாக ஷென்ஜோ 19 விண்கலம் பாய்ந்தது என்று சீனா தெரிவித்துள்ளது.
3 விண்வெளி வீரர்களுடன் விண்ணில் பாய்ந்த ஷென்ஜோ -19 விண்கலம், நிர்ணயிக்கப்பட்ட சுற்றுவட்டப்பாதையை வெற்றிகரமாக சென்றடைந்ததாக சீனா தெரிவித்துள்ளது.
விண்வெளியில் நாசாவுக்கு போட்டியாக சீனா அமைத்துவரும் டியாங்காங் விண்வெளி நிலையத்தை இந்த விண்கலம் விரைவில் சென்றடையும் எனவும், அதில் உள்ள 3 விண்வெளி வீரர்களும், 6 மாதங்கள் அங்கு தங்கி ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள் எனவும் சீனா தெரிவித்துள்ளது.
விண்ணில் உலாவிவரும் செயலற்ற விண்கலங்களும், அவற்றின் உதிரி பாகங்களும் மோதி, விண்வெளி நிலையம் சேதம் அடையாமல் இருக்க அதன் வெளிப்புறத்தில் பாதுகாப்பு சாதனங்களை அவர்கள் பொருத்தப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.