அமெரிக்கா: அமெரிக்க அதிபர் தேர்தலில் 2 மாநிலங்களில் வாக்குப்பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் 2 மாநிலங்களில் வாக்குப்பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். நவம்பர் 5-ஆம் தேதி, அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்கள் முன்கூட்டியே வாக்கு செலுத்த ஏதுவாக பல இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படும் வாஷிங்டனிலும், ஆரிகனிலும் இரு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பெட்டிகளுக்குள் விஷமிகள் தீயை கொளுத்தி போட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வாக்குப்பெட்டிக்குள் பொருத்தப்பட்டிருந்த தீயணைப்பான் கருவியால் நெருப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், இருந்தபோதும் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்குச் சீட்டுகள் எரிந்துபோயிருக்கலாம் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.