சென்னை: அன்றாடம் பயன்படுத்தும் சில எளிய மசாலாப் பொருட்கள் ஆச்சரியமளிக்கும் ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகின்றன. ஆனால் நாம் பெரும்பாலும் உணவை உட்கொள்ளும்போது, அவற்றை விலக்கி வைக்கவே விரும்புவோம். அத்தகைய அற்புத ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள மிளகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.
கொரோனா நோய் தொற்றானது, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை நாம் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. அடுத்தடுத்து பரவி வரும் கொரோனா மாறுபாடுகளுக்கு இடையே, நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நமக்கு நல்ல உணவு பழக்கம் தேவைப்படுகிறது.
அத்தகைய உணவுப் பொருட்களில், கிராம்பு, மிளகு, இலவங்கப்பட்டை, சீரகம் மற்றும் ஏலக்காய் ஆகியவை பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட முக்கிய பொருட்கள். இவை ஒவ்வொரு இந்திய சமையலறைகளிலும் காணப்படுகின்றன.
மிளகு நன்மைகள்: மிளகானது தூள் வடிவத்திலும் முழு வடிவத்திலும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது இந்திய குடும்பங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களில் ஒன்றாகும், மேலும் இது லேசான காரமான சுவையைக் கொண்டுள்ளது, இது சுவை மொட்டுகளுக்கு புத்துணர்வு அளிக்கிறது.
இது வாதம், தோல் நோய்கள் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவையும் கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகிறது. மிளகு மசாலா ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை அதிகரிக்கவும் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அறியப்படுகிறது.
உங்கள் தினசரி உணவில் மிளகு சேர்ப்பது எளிதானது. தேநீர், காபி மற்றும் பிற சூடான பானங்களில் சுவையை மேம்படுத்த தூள் அல்லது முழு மிளகை சேர்க்கலாம். நம்முடைய பெரும்பாலான உணவுப் பொருட்களில் மிளகு சேர்க்கப்பட்டே சமைக்கப்படுகிறது. நீங்கள் சாலடுகள் மற்றும் சூப்களில் மிளகை சேர்க்கலாம். இதனால் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.