புதுடெல்லி: டெல்லியில் தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ‘கணபதி பூஜைக்காக எனது இல்லத்துக்கு பிரதமர் வந்தார். நீதித்துறைக்கும் நிர்வாகத்துக்கும் இடையிலான சந்திப்புகள் சமூக மட்டத்தில் கூட அடிக்கடி நடைபெறுவதால் பிரதமர் மோடி எனது வீட்டுக்குச் செல்வதில் தவறில்லை.
குடியரசுத் தலைவர் மாளிகை, குடியரசு தினம் போன்ற இடங்களில் நாங்கள் சந்திப்போம். பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் அடிக்கடி உரையாடுகிறோம். இந்த உரையாடல் நாங்கள் முடிவெடுக்கும் வழக்குகளைப் பற்றியது அல்ல. ஆனால் பொதுவாக வாழ்க்கை மற்றும் சமூகம் தொடர்பாக. வலுவான இரண்டு அமைப்புகளின் ஒரு பகுதியாக ஒரு உரையாடல் நடந்தது என்பதை மதிக்கவும்.
நீதித்துறைக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான அதிகாரங்களைப் பிரிப்பது என்பது இருவரும் சந்திக்கவே கூடாது என்று அர்த்தமல்ல. அயோத்தி ராமர் கோவில் பிரச்சனைக்கு தீர்வு காண நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன் என்பது நான் மதவாதி என்று தான் அர்த்தம். அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பேன்,” என்றார்.