புதுடில்லி: பிரதமர் ரஷ்யா பயணம்… ஜூலை 8-ம் தேதி பிரதமர் மோடி ரஷ்யா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி வரும் ஜூலை மாதம் ரஷ்யா செல்ல உள்ளதாக கடந்த 24-ம் தேதி அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. இந்தியா – ரஷ்யா உச்சி மாநாடு ரஷ்யாவில் நடக்க உள்ளது. கடைசியாக 2021 ம் ஆண்டு டிச.26-ம் தேதி டில்லியில் நடந்தது. இதில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்றார்.
இந்நிலையில் ரஷ்ய உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்பது குறித்து நேற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்படி வரும் ஜூலை 08-ம் தேதி பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் உறுதியாகியுள்ளது. இப்பயணத்தின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து இரு தரப்பு பரபஸ்பரம் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
உக்ரைனுடனான போருக்கு பின் முதன்முறையாக மோடி ரஷ்யா செல்ல உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.