ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்க பகுதியில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஊழலில் சிக்கியுள்ளது. ஜார்க்கண்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நிலக்கரி ஊழல் உள்ளிட்ட ஊழல்கள் தடுக்கப்படும். அப்போது நிலக்கரி வியாபாரிகள் அச்சப்பட தேவையில்லை. பொதுப் பணத்தை கொள்ளையடித்த ஊழல் தலைவர்களை பா.ஜ.க. ஆட்சியில் அனுமதிக்க முடியாது.
தலைகீழாக தொங்கவிடப்படுவார்கள். ஜார்க்கண்டில் பழங்குடியினரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஊடுருவல்காரர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார். ஜார்கண்ட் மாநிலத்தை ஆக்கிரமிக்கும் வங்கதேசத்தினர் இங்குள்ள பழங்குடியின பெண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களின் நிலங்களை அபகரித்து வருகின்றனர்.
பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்றுவதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும். ஊடுருவும் நபர்களை அடையாளம் கண்டு விரட்டுவோம்,” என்றார்.