குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் பாகற்காய் குழம்பு என்றாலே முகம் சுழிப்பார்கள். ஆனால் அதில் சத்து ஏராளம் உள்ளது. அதன் சத்து குறையாமல் அதேசமயம் அதில் உள்ள கசப்பே தெரியாமல் ருசியாக சமைக்க இந்த ரெசிபியை தெரிஞ்சு வச்சுக்கோங்க.
தேவையான பொருட்கள்
பாகற்காய் – 1
வெந்தயம் – 1 tsp
சின்ன வெங்காயம் – 100 கிராம்
நல்லெண்ணெய் – 2 tbs
கறிவேப்பிலை – சிறிதளவு
புளி – நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தே.அ
குழம்புக்கு பேஸ்ட் அரைக்க
துருவிய தேங்காய் – 1/4 கப்
வெங்காயம் – 20
தக்காளி – 3
மல்லி தூள் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
செய்முறை
பாகற்காயை கடாயில் சேர்த்து எண்ணெய் ஊற்றி வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் துருவிய தேங்காய், மல்லி தூள், சின்ன வெங்காயம், மிளகாய் தூள், சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். பொன்னிறமாக வந்ததும் அடுப்பை அணைத்து அதை ஆற வையுங்கள்,
பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அதையும் ஆற வையுங்கள் .
பிறகு அனைத்தையும் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள். குழம்புக்கான விழுது தயார்.
இப்போது கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து வெந்தயம் போடுங்கள். பொன்னிறமானதும் கறிவேப்பிலையை சேருங்கள்.
பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அடுத்து வதக்கி வைத்துள்ள பாகற்காயை சேருங்கள். அதையும் 5 நிமிடங்களுக்குள் வதக்கிக்கொள்ளுங்கள்.
பிறகு அரைத்த பேஸ்ட் சேர்த்து நன்கு கலந்துவிடுங்கள், பிறகு புளியை கரைத்து அதில் ஊற்றுங்கள். பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடிவிடுங்கள்.
10 நிமிடங்கள் கழித்த பிறகு திறந்தால் நன்கு கொதித்து குழம்பு பதத்திற்கு வந்துவிடும். அதன்மீது கொத்தமல்லி தழை துவி இறக்கிவிடுங்கள்.
அவ்வளவுதான் சுவையான பாகற்காய் குழம்பு தயார்.