சேலம்: சேலம் பெரியார் பல்கலைக் கழக கல்வித் துறைத் தலைவர் நியமனத்தில், துணைவேந்தர் ஜெகநாதன் விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கல்வித் துறைத் தலைவர் பதவிக்கு உரிய தகுதி மற்றும் பணி மூப்பு உள்ள தனலட்சுமி என்ற பேராசிரியை புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
தகுதியான பேராசிரியர் தனலட்சுமியை புறக்கணித்து பேராசிரியர் வெங்கடேஸ்வரனை துணைவேந்தர் ஜெகநாதன் நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கல்வித்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் வெங்கடேஸ்வரன், சேலம் பல்கலையிலேயே பணிபுரிவதில்லை என புகார் எழுந்தது.
பல்கலைக் கழகக் கல்லூரி முதல்வராக இருந்த பேராசிரியர் வெங்கடேஸ்வரன், துறைத் தலைவராக நியமிக்கப்பட்டது விதிமீறல் என புகார் எழுந்துள்ளது.