மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்), தி வால்ட் டிஸ்னி நிறுவனம் மற்றும் வயாகாம் 18 மீடியா பிரைவேட் லிமிடெட் ஆகியவை டிவி மற்றும் டிஜிட்டல் தளங்களை ஒன்றிணைப்பதாக அறிவித்துள்ளன. இதன் கூட்டு மதிப்பு ரூ.70,000 கோடி என அறியப்படுகிறது. இந்த நிறுவனங்களின் இணைப்பின் மூலம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களின் அனைத்து வகையான அங்கீகாரங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இது ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் மிகப்பெரிய இணைப்பாக பார்க்கப்படுகிறது. மேலும், பார்வையாளர்கள் அதிக உள்ளடக்கத்தைக் கண்டுபிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை ஸ்டார் மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சியில், ஜியோ சினிமா மற்றும் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் கூட்டாகப் பார்க்கிறது. இதில் 36.84 சதவீத பங்குகளை டிஸ்னி வைத்திருக்கும்.
ரிலையன்ஸ் நேரடி உரிமையாளராக 16.34 சதவீதத்தையும், மீடியா மூலம் வயாகாம் 18 46.82 சதவீதத்தையும் வைத்திருக்கும். இதன் மொத்த ஆண்டு வருமானம் சுமார் ரூ.26,000 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி நிறுவனம் ஏகபோகமாக தொழில் செய்யும் என வணிக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதன் தலைவராக நீட்டா அம்பானியும், துணைத் தலைவராக உதய் சங்கரும் உள்ளனர். செயல்பாடுகளை நிர்வகிக்க மூன்று தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளனர். கூட்டு முயற்சியானது ஆண்டுக்கு 100 தொலைக்காட்சி சேனல்கள், 30000+ மணிநேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உருவாக்கும். ஜியோ சினிமா மற்றும் ஹாட்ஸ்டார் தளங்களில் மட்டும் சுமார் 50 மில்லியன் பயனர்கள் உள்ளனர்.
“இந்த கூட்டு முயற்சியின் மூலம், இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை மாற்றத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. டிஸ்னி உடனான இந்த பயணம், இந்திய பார்வையாளர்களுக்கு மலிவு விலையில் அதிக உள்ளடக்கத்தை வழங்குவதை உறுதி செய்யும்,” என்று ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி கூறினார்.