சென்னை: சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை அடையாறு இந்திரா நகர் 2-வது அவென்யூவில் குடிநீர் மெயின் குழாய் மாற்றும் பணி நடைபெறுவதால் பள்ளிப்பட்டு குடிநீர் விநியோக நிலைய பணிகள் நாளை இரவு 7:00 மணி முதல் காலை 19-ம் தேதி காலை 5 மணி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
இதனால் அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட சில இடங்களில் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அடையாறு மண்டலம் 169-வது வார்டு, சைதாப்பேட்டை தாலுகா அலுவலக சாலை, வேளச்சேரி மெயின் ரோடு, சர்தார் பட்டேல் சாலை, ஸ்ரீநகர் காலனி, ரங்கராஜபுரம், எல்டிஜி சாலை, ஆரோக்கிய மாதா நகர், வெங்கடாபுரம் ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
170, 173, 174, 179, 180 ஆகிய வார்டுகளில் சில இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் போதுமான அளவு குடிநீரை சேமித்து வைக்க வேண்டும். வாரியத்தின் இணையதளமான https://cmwssb.tn.gov.in ஐப் பயன்படுத்தி அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் பதிவு செய்து குடிநீர் பெறலாம். குடிநீர் விநியோகம் தடையின்றி வழக்கம் போல் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.