சென்னை: கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் உள்ள தாம்பரம் யார்டில் பராமரிப்பு பணியும், சென்னை எழும்பூரில் மேம்பாட்டு பணிகளும் நடந்து வருகின்றன. இதன் காரணமாக ரயில் சேவையில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரயில்வே பராமரிப்பு பணிகள் மற்றும் செயல்பாட்டு காரணங்களால் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே தலா 14 மின்சார ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு காலை 6.52, 7.33, 8.43, 9.40, 11.30, 11.41, 12.30, 12.50, மதியம் 3.15, 4.25, 5.43, 7.85, 6.8 pm இருக்கும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. எதிர் திசையில் தாம்பரத்தில் இருந்து கடக்கரைக்கு காலை 5.12, 6.03, 7.17, 8.19, 9.00, 10.40, 11.30, 11.40, மதியம் 1.40, 2.57, மாலை 4.15, 4.15 மணி என மின்சார ரயில் சேவைகள் மாலை 6.26 மணி இருக்கும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இதனால், நவம்பர் 22-ம் தேதி முதல் மின்சார ரயில்களின் நேரம் சிறிது மாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:- சென்னை கடற்கரையில் இருந்து வார நாட்களில் அதிகாலை 3.50, 4.15, 4.55, 5.15, 5.30, 5.50, 6.05, 6.20 ஆகிய நேரங்களில் மின்சார ரயில்கள் புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு சென்றடையும்.
இதேபோல் 50 மின்சார ரயில்களின் நேரமும் சிறிது மாற்றம் செய்யப்படும். இதேபோல், செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரயில்களின் நேரமும் சிறிது மாற்றம் செய்யப்படும். மேலும், செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு புறப்படும் மின்சார ரயிலின் நேரத்திலும் சிறிது மாற்றம் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.