தென்காசி: குற்றாலத்தில் ஒரு வாரத்துக்கு பின், கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகள் சுதந்திரமாக குளிக்க அனுமதிக்கப்பட்டனர். 2 நாட்களாக மழை இல்லை, பகலில் வெயிலின் உஷ்ணமும் இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அருவியில் தண்ணீர் நன்றாக ஓடுகிறது.
கடந்த 5 நாட்களாக மெயின் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டது. விடுமுறை நாளான நேற்று, சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மெயின் அருவியின் மையப் பகுதிக்குள் நுழைய முடியாதவாறு தடுப்புகள் போடப்பட்டதை அடுத்து, ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.