8GB + 128GB ஸ்டோரேஜ் வசதியுள்ள Oppo A3 Pro ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.17,999 ஆகும். இதுவே 8GB + 256GB ஸ்டோரேஜ் என்றால், அதன் விலை ரூ.19,999 ஆகும். இந்த போனை Oppo India–வில் ஆன்லைன் ஸ்டோர் மூலமாகவோ அல்லது அமேசான், ஃப்ளிப்கார்ட் தளங்கள் மற்றும் குறிப்பிட்ட ரீடெயில் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.
ஹெச்.டி.எஃப்.சி, எஸ்பிஐ, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, யெஸ் பேங்க் மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் கார்டு வைத்துள்ளவர்களுக்கு போனின் விலையில் 10 சதவிகித தள்ளுபடி தரப்படுகிறது. இது தவிர முன்பணம் செலுத்த வேண்டியதில்லை, வட்டியில்லா இஎம்ஐ போன்ற ஆப்ஷன்களும் உள்ளன. Oppo A3 Pro போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மூன்லைட் பர்பிள் மற்றும் ஸ்டேரி ப்ளாக் என்ற இரண்டு நிறங்களில் Oppo A3 Pro போன் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1,000nits பிரைட்நெஸ் ஆகியவற்றுடன் 6.67 இன்ச் ஸ்க்ரீனுடன் வருகிறது Oppo A3 Pro. இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பிளாஷ் டச் வசதி உள்ளது. இதன் மூலம் ஈரமான கைகளை கொண்டு கூட ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியும்.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Oppo A3 Pro மாடலில் மீடியா டெக் டைமன்சிட்டி 5G SoC சிப்செட் உள்ளது. ஸ்டோரேஜை பொறுத்தவரை 8GB RAM மற்றும் 256GB இட வசதி உள்ளது. இதில் RAM ஸ்டோரேஜை 16GB வரை அதிகப்படுத்திக்கொள்ள முடியும். ஆண்டிராய்டு 14 அடிப்படையிலான ColorOS 14 இயங்குதளத்தை பெற்றுள்ளது இந்த போன்.
கேமரா வசதியை பொறுத்தவரை, போனின் பின்புறம் டூயல் கேமரா உள்ளது. இதில் முதன்மை கேமரா 50MP திறன் கொண்டது. செல்ஃபி விரும்பிகளுக்காக போனின் முன்புறம் 8MP கேமரா உள்ளது. இது தவிர நெட்வொர்க் நிலைத்தன்மையை அதிகரிக்க உதவும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான AI LinkBoost மற்றும் நாம் எடுக்கும் புகைப்படத்தில் தேவையற்ற விஷயங்களை அகற்ற உதவும் AI Eraser என்ற புதிய வசதிகளும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.
5,100mAh திறனுள்ள பேட்டரியை பெற்றுள்ள Oppo A3 Pro ஸ்மார்ட்போனில், சார்ஜ் ஏற்றுவதற்கு வசதியாக 45W வயர் சார்ஜர் உள்ளது. தண்ணீர் துளிகள் மற்றும் தூசிகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் IP54 ரேட்டிங்கை இந்த போன் பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 7.68 மிமீ அடர்த்தியும் 186 கிராம் எடையும் கொண்டுள்ளது.